நிலவேம்பு கசாயம் விநியோகம் கணேசபுரம் 20/08/2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை சார்பாக இன்று 20.7.17.ஞாயிறு -100 லிட்டர் நில வேம்பு கஷாயம் தயார் செய்து ,கணேசபுரம்,ஜெய்நகர்,நடராஜபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.மேலும் திருச்சி ரோடு உதயம் மளிகை முன்பும் விநியோகிக்கப்பட்டது.

Advertisements

அறிவும் அமலும் தேர்வு 20/08/2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் கடந்த 20/08/2017 அன்று பேட்டை கிளை மர்கஸில் அரிவும் அமலும் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்

வென்னந்தூரில் பூதிய கிளை மற்றும்ஜும்மாஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் வென்னந்தூரில் 18/08/2017 முதல் நபிவழி ஜும்மா ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வென்னந்தூர் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் நாமக்கல் உழவர் சந்தை மற்றும் பேட்டை சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகில் ஆகிய இரு இடங்களில் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவுடன் இனைந்து நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு விழிப்புனர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

வாழ்வாதார் உதவி நாமக்கல் மாவட்டம் 04/08/2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் கடந்த 04/08/2017 அன்று மும்தாஜ் என்ற சகோதரிக்கு ₹ 2000/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது

மாற்று மத தாஃவா திருச்செங்கோடு 25/07/2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிளை சார்பில் கடந்த 25/07/2017 அன்று அம்பிகா என்ற மாற்று மத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய ஏகத்துவ இறை கொள்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட்து.

மருத்துவ உதவி 19/07/2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் கடந்த 19/07/2017 அன்று தஸ்தகீர் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமையில் இருந்து பெறப்பட்ட ரூ. 15,000/- வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு கிளை மாவட்டம் சந்திப்பு

  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிளையில் கடந்த 21/07/2017 அன்று கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

திருச்செங்கோடு கிளை ரமதான் திடல் தொழுகை 2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிளை சார்பில் கடந்த 26/06/2017 அன்று திருச்செங்கோடு முருகாலயா சில்க்ஸ் பின்புறம் உள்ள திடலில் நடைபெற்றது. இதில் சகோதரர் அஜீஸ் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்

ரமதான் திடல் தொழுகை 2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பில் கடந்த 26/06/2017 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் திடலில் ரமதான் பெருநாள் திடல் தொழுகை நபிவழி படி நடைபெற்றது.